திருச்சி பள்ளியில் மறைந்த முதல்வர் ஜெ பிறந்தநாள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிப்பு

திருச்சி பள்ளியில் மறைந்த முதல்வர் ஜெ பிறந்தநாள்  மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு  நாளாக அனுசரிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா  அவர்களின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24 ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  எனவே அனைத்துப் பள்ளிகளிலும் மேற்படி தினத்தில் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறை ஆணையின் பேரில் திருச்சி, தென்னூர், சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் இன்று மூன்றாம் பருவ விலையில்லா குறிப்பேடுகள் பெற வந்த மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

???? இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன்.

 ???? எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன்.

???? எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்த ஒரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன்.

 ???? மேலும், இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன்.


???? இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன்.

???? குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன்.

 ???? நான், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன்.

???? இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்.

நிறைவில் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH