எந்த ஊர் பெரிய ஊர் மாணவர்களுக்குள் சண்டை வகுப்பறையில் மாணவர் மரணம் - பதட்டம்

எந்த ஊர் பெரிய ஊர் மாணவர்களுக்குள் சண்டை வகுப்பறையில் மாணவர் மரணம் - பதட்டம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசுமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் படித்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மெளலீஸ்வரன் என்ற மாணவரை மற்றொரு மாணவர்கள் தள்ளி விட்டதில் பின் தலையில் அடிபட்டு சுய நினைவு அடடைந்துள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக அவரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு மவுலீஸ்வரனை சோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இறந்த மவுலீஸ்வரன் தோளூர் பட்டியை சேர்ந்தவர் என காவல்துறையினர் விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர். தற்பொழுது காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு மாணவர்களை தொட்டியம் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இவர்களின் ஆசிரியர் ராஜேந்திரன் அப்பொழுது கேள்வி எழுந்த நிலையில் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் அப்போது தேநீர் அருந்த சென்றதாக போலீசார் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஊர் பெரிய ஊர் என இவர்களுக்குள் சண்டை வந்ததில்  தான் இச்சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினருக்கு முதல் கட்ட தகவல் விசாரணையில்  கிடைத்துள்ளது. தற்பொழுது அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ளது. திருச்சி தொட்டியம் சாலையில் தற்பொழுது பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதட்டமான சூழல் நிலவுகிறது.

மாணவன் உயிரிழந்த நிலையில் அவரது உறவினர்கள் பள்ளி முன்பு நாமக்கல்  - திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவனின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் பணியில் அலட்சிய போக்காக இருந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn