திருச்சி பிஷப் ஹீபர்  கல்லூரியின் வரலாற்றுத்துறையில்  நான் ஒரு நல்ல குடிமகனா? என்ற கருத்தரங்கு

திருச்சி பிஷப் ஹீபர்  கல்லூரியின் வரலாற்றுத்துறையில்  நான் ஒரு நல்ல குடிமகனா? என்ற கருத்தரங்கு

திருச்சி பிஷப் ஹீபர்  கல்லூரியின் வரலாற்றுத்துறையில் இன்று,  "நான் ஒரு நல்ல குடிமகனா? என்ற தலைப்பில்    மாணவர்களின் ஆர்வத்தை வளர்த்திடும் கருத்தரங்கிற்கு ஏற்பாடு  செய்திருந்தது.  இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கபிலன் ராமராஜன் கலந்து கொண்டார் .இவர்  கபிலன் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக  அதிகாரியாவார்.   கௌரவ பேராசிரியர் முனைவர்.எலிசபெத் அவர்கள் பிரார்த்தனை  செய்து   கருத்தரங்கை தொடங்கி வைத்தார்கள். மூன்றாமாண்டு மாணவன் விக்னேஷ் வரவேற்புரை வழங்கினார் .

அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கபிலன் ராமராஜன் மாணவர்களுக்கு  "நல்ல குடிமகன் என்பவன் யார்?" எவ்வாறு இருக்க வேண்டும் ?    நேர்மறையான   எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, நல்ல கருத்துக்களையும் நல்ல பண்புகளையும் பின்பற்ற வேண்டும் . நாம் பின்பற்ற வேண்டும் என்று விதிக்கப்பட்ட  சட்டங்களையும் போக்குவரத்து  விதிகளையும் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் .


 மாற்றத்தை  சமுதாயத்திடமிருந்து எதிர்பார்ப்பதை விட மாற்றத்தை தன்னிடத்தில் இருந்து எவ்வாறு தொடங்க வேண்டும் என்பதையும் மாணவர்களுக்கு அழகாக எடுத்துரைத்தார் .
"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை உணர்த்தினார் .  

வரலாற்று மாணவர்கள்  குடிமைப்பணியை   மட்டுமே தனது நோக்கமாக முன் நிறுத்திக் கொள்ளாமல்  வரலாற்று ஆய்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் .கல்வெட்டுகளில் காணப்படும் வரலாற்று உண்மைகளை வெளிஉலகிற்கு   கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.  என்ற அறிவுரையையும் வழங்கினார்.
 

பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் சரியான பதிலை உடனுக்குடன் வழங்கினார்.   திருச்சி  விஷன் மீடியா நிறுவனர் மற்றும் சமூக ஆர்வலரான திரு.மனோஜ் தர்மர் அவர்கள் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தார் .இளங்கலை மூன்றாமாண்டு மாணவி அச்சுத யாழினி நன்றியுரை வழங்கினார் .இது மாணவர்களால்,  மாணவர்களின்  நலனுக்காக நடத்தப்பட்ட ஒரு விழாவாக இருந்தது.,   வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் .ஃபெமிளா அலெக்சாண்டர் மற்றும்  உதவி பேராசிரியர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH