பகலில் பெங்களூர் ரயில் இயக்க வேண்டும் - திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் கோரிக்கை மனு

பகலில் பெங்களூர் ரயில் இயக்க வேண்டும் - திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் கோரிக்கை மனு

ரயில்வே வாரிய தலைவர் சுனீீத் சர்மாவை திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார்.

அப்போது காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி வழியாக திருவாரூர் செல்லும் அகல ரயில் பாதை ரூபாய் ஆயிரம் கோடி செலவு செய்து பணிகள் நிறைவுற்று, ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் தேவையான ஆட்களை நியமித்து ரயில் சேவை தொடங்கப்பட்டாமல் உள்ளது. இந்த ரயில் சேவையை உடனே துவங்க வேண்டும் என திருநாவுக்கரசு வலியுறுத்தினார்

மேலும் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு பகலில் விரைவு ரயில் சேவை துவங்க வேண்டும். திருச்சியிலிருந்து கீரனூர் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து ரயில்களும் கீரனூர் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு மூலமாக வலியுறுத்தி உள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY