பொன்னர் – சங்கர் மாசி பெருந்திருவிழா - வேடபரி நிகழ்ச்சி

பொன்னர் – சங்கர் மாசி பெருந்திருவிழா - வேடபரி நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பொன்னர் - சங்கர் மன்னர்களின் மாசி பெருந்திருவிழாவில் புதன்கிழமை வீரப்பூர் ஆலய திடலில் பெரிய காண்டியம்மன் யானை வாகனத்திலும், பொன்னர் குதிரை வாகனத்திலும் புறப்பட்ட வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வீரப்பூரில் நடைபெற்று வரும்  பொன்னர் – சங்கர் மன்னர்களின் மாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான எட்டாம் நாள் திருவிழா வேடபரி நிகழ்ச்சி வீரப்பூர் கன்னிமாரம்மன் வைகையறா கோவில் பெரிய காண்டியம்மன் ஆலயத் திடலில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. சாம்புவன் காளையின் முதுகில் முரசு கட்டி கொட்டி கொண்டே முன்னே செல்ல

அதனை தொடர்ந்து வீரப்பூர் ஜமீன்தார் பரம்பரை அறங்காவலர்கள், மற்றும் பட்டையதாரர்கள் வர பட்டியூர் கிராமங்களின் இளைஞர்கள் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் கோவிலுக்குள் ஓடி சென்று குதிரை வாகனத்தில் பொன்னரை வைத்து தூக்கி வந்தனர்.

அதைத் தொடர்ந்து யானை வாகனத்தின் பெரியகாண்டியம்மன் பின்னே  வர, அணியாப்பூரில் உள்ள குதிரை கோவிலுக்கு பொன்னர் அம்பு போட சென்ற நிகழ்வு நடைபெற்றது. ஆலயத்திடலில் செவ்வாய் (நாளை) தேரோட்டம் நடைபெறுகிறது. பின் புதன்கிழமை மாலை மஞ்சள் நீராடுதல் விழாவுடன் மாசிப் பெருந்திருவிழா நிறைவு பெறுகின்றது.

வேடபரி திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு கொங்கு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேடபரி நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn