திருச்சியில் மின்சார வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்

திருச்சியில் மின்சார வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மின் பகிர்மான வட்டம் பெருநகரம் / திருச்சி சார்பில் E.Vehicle Awareness Campaign through Road Shows மின்சார வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் (15.11.2023) (புதன்கிழமை)

திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் S. பிரகாசம் முன்னிலையில், பகிர்மானம் தலைமை பொறியாளர் S.செடியழகன் தலைமையில் மின்சார வாகன விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தலைமை பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளரால் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில், திருச்சி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அனைத்து அலுவலர்கள் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

E-Vehicle Banner ஒட்டிய வாகனம் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட நகரியம் சார்ந்த பகுதிகளில் மின்சார வாகனம் தொடர்பான Audio ஒளிபரப்பப்பட்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision