உதவி கேட்ட மாணவி - கடிந்து கொண்ட நடிகர் விஷால்

உதவி கேட்ட மாணவி - கடிந்து கொண்ட நடிகர் விஷால்

திருச்சி அருகே சிறுமருதூர் சாலையில் நடைபெற்று கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷாலை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது டெல்லியில் போராட்டம் நடத்திய திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் ராயப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெகதீசன் (கடந்த 11.11.2023 சனிக்கிழமை) தன்னுடைய வயலில் பாசனம் செய்ய கிணற்றில் இருந்து மின்மோட்டாரில் நீர் இறைக்கும்போது மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.

அவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவிட கோரினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் அய்யம்பாளையம் அருகே கொல்லுகட்டிப்பாளையம் சேர்ந்த இறந்த விவசாயி செல்வகுமார் குடும்பத்தினரை (மனைவி சித்ரா, மகள், மகன்) வரவழைத்து நேரில் சந்தித்து அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். சித்ரா விவசாய கூலி வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார்.

அப்போது சித்ரா பிள்ளைகள் பார்த்து நன்றாக படிப்பீர்களா (சித்ரா மகளிடம்) ஐஏஎஸ் ஆவீர்களா என்றால் நான் படிக்க வைக்கிறேன் என்று எல்லோரும் முன்னிலையில் அவர்களிடம் கேட்டார். நன்றாக படிப்பேன் என்று அவர்கள் பதில் அளித்தனர். அதற்கு முன்னதாக இறந்த விவசாயி மனைவியிடம் (சித்ராவிடம்) நீங்கள் சாப்பிட்டீர்களா என்று கேட்க, இல்லை என்று சொன்னவுடன் கோபமடைந்த விஷால், உதவியாளரிடம் டேய் லூசு முதலில் அவர்களை சாப்பிட வை என்று எல்லோரும் முன்பு கடிந்து கொண்டார்.

நீங்கள் முதலில் சாப்பிட்டு வாருங்கள் சாப்பாடு இருக்கிறது. அதன் பின் என்னை சந்திக்கலாம் நான் இங்கேதான் இருப்பேன் என்று விஷால் விவசாயிகள் முன் கூறியது அனைவரும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision