உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த வீடியோ தொகுப்பை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி வெளியீடு

உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த வீடியோ தொகுப்பை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி வெளியீடு

உடலும் உள்ளமும் உறுதி பெறட்டும் உறுதியான உடற்பயிற்சியால் என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோ தொகுப்பை வெளியிட்டுள்ளார் .தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் உடற்பயிற்சி மேற்கொள்கிறார். அவ்வழியில் நாமும் உடற்பயிற்சியை மேற் கொள்வோம் என்று இளைஞர்களை இந்த வீடியோ மூலம் ஊக்கப்படுத்தி உள்ளார்.

தினமும் உடற்பயிற்சிக்கு ஒரு மணி நேரம் செலவிட வேண்டும் என்றும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் நாள் முழுவதும் உடலும் உள்ளமும் புத்துணர்வுடன் இருக்கும் என குறிப்பிட்டார். காலையில் நடைப்பயிற்சி, ஓட்டம், இறகுப்பந்து விளையாடுதல் மற்றும் கிரிக்கெட் கூடைபந்து  உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஆர்வம் செலுத்துகிறார். மேலும் யோகா பயிற்சியும் மேற்கொண்டு மனதையும் திடப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவிதத்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் இந்த விழிப்புணர்வு வீடியோ என்பது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கும் ,இளைஞர்களுக்கும் உடற்பயிற்சி முக்கியமானது என்றார்.

நாட்டில் நல்ல ஆரோக்கியமான இளைஞர்களை உருவாக்கினால் அந்த நாட்டின் வளர்ச்சி மேம்படும் எனவும் தெரிவித்தார். அனைவரும் தற்போது மனதளவில் சோர்வடைந்து இருந்தாலும்  உடற்பயிற்சியை மேற்கொண்டு மீண்டு எழுந்து உடலையும் உள்ளத்தையும் புது உயிர் கொடுத்து நலமுடன் வாழ கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று காலை (30.07.2021) உடற்பயிற்சி குறித்த இந்த வீடியோ தொகுப்பை பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட போது தேசிய கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி மற்றும் ஜமால் முகமது கல்லூரி உதவி பேராசிரியர் குணசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr