திருச்சியில் 23 ஏக்கர் பரப்பளவில் நகர்வனம் உருவாக்க திட்டம்
திருச்சி மாவட்டம் முக்கம்பூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு இடையே வனப்பகுதியில் 123 ஏக்கர் பரப்பளவில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் நகர்வனம் என்ற புதிய திட்டம் வனத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது சூழல் சார்ந்த சுற்றுலா தளமாகவும் பல்லுயிர் பெருக்கம் குறித்த பயிற்சி மையமாகவும் இந்த நகர்வனம் விளங்க உள்ளது.
தாவரங்களின் வாழ்வியல் முறை காற்று மாசுபாட்டை குறைத்து தூய்மையான காற்றை சுவாசிக்க செய்வது பசுமை சுகாதாரம் மூலம் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை சூழலை இந்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும் பாறைகளைக் கொண்டு வலை போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் மரங்களை வளர்த்து மலைத்தோட்ட உருவாக்குதல்
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அடர்ந்த மரங்களுக்கு இடையே பரப்பளவிலான தொங்குபாலம், மரங்களின் மீது சிறு கூடாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அங்கு சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்பு வேலி அமைப்பதற்கான ஆய்வுப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO