திருச்சி மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி போடும் பணி துவக்கம்!!

திருச்சி மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி  போடும் பணி துவக்கம்!!

Advertisement

திருச்சி மாவட்டத்தில் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, லால்குடி, மணப்பாறை, ஸ்ரீரங்கம் மருத்துவமனைகள், இனாம்குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மொத்தம் ஐந்து இடங்களில் என்று கோவிட் தடுப்பூசி போடும் பணி மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் துவக்கி வைக்கிறார். 

Advertisement

திருச்சி மாவட்டத்தில் முதல் தடுப்பூசியை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் சதீஷ்குமார்(49) போட்டுக்கொள்கிறார். திருச்சி அரசு மருத்துவமனையில் பேராசிரியராக மருத்துவ பிரிவில் பணியாற்றுகிறார். ஏற்கனவே பன்றிகாய்ச்சலுக்கும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது.

முதலில் கோவிஷீல்டு தான் போடப்படுகிறது.கோவாக்சினும் உள்ளது.தடுப்பூசி போட்டு கொள்பவர்களின் விருப்பம் இரண்டும் தடுப்பூசிகளில் எதை வேண்டுமானலும் தேர்ந்தெடுக்கலாம் என திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா தகவல் தெரிவித்தார்.

 Advertisement

திருச்சி மாவட்டத்தில் 84 முன்கள பணியாளர்கள் பதிவு. திருச்சி அரசு மருத்துவமனையில் முதலில் சதீஷ்குமார்,ராஜ்குமார்,பார்த்திபன்,செல்வகுமார் உள்ளிட்ட 4 மருத்துவர்களுக்கு முதலில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டது.