உய்யக்கொண்டானில் கொட்டப்படும் மீன்கழிவுகள் - புதிய மீன் மார்க்கெட் அவலம் - கண்டுகொள்ளுமா மாநகராட்சி?

உய்யக்கொண்டானில் கொட்டப்படும் மீன்கழிவுகள் - புதிய மீன் மார்க்கெட் அவலம் - கண்டுகொள்ளுமா மாநகராட்சி?

Advertisement

திருச்சி புத்தூர் அருகே இயங்கி வந்த மீன் மார்க்கெட் அருகாமையில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணமே இருந்தன. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி கோ-அபிஷேகத்திற்கு உட்பட்ட உரையூர் 60வது வார்டு குழுமணி பிரதான சாலையில் லிங்கா நகர் காசி விளங்கி பகுதியில் 3.32 கோடியில் புதிய மீன் மார்க்கெட் வணிக வளாகம் அமைக்கப்பட்டு மீன் மார்க்கெட் நடைபெற்று வருகிறது.

இங்குதான் திருச்சியின் மையப் பகுதியில் சுமார் 8 கிலோமீட்டர் ஓடும் உய்யக்கொண்டான் ஆறு காசி விலங்கு பகுதியை கடந்து செல்கிறது. இந்நிலையில் புதிய மீன் மார்க்கெட் வியாபாரிகள் தொடர்ந்து மீன் கழிவுகளை உய்யக்கொண்டான் ஆற்றில் கொட்டி வருகின்றனர். இது சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

Advertisement

தொடர்ந்து மழை பெய்யும் வேலையில் உய்யகொண்டான் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும் சூழ்நிலையில் சுகாதாரமற்ற முறையில் மீன் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஆவதாகவும், உடனடியாக மாநகராட்சி இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement