புர்காவில் தங்கம் கடத்தல் - அதிகாரிகள் விசாரணை

புர்காவில் தங்கம் கடத்தல் - அதிகாரிகள் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கத்தை கடத்தி வந்து குருவிகளாக இயங்கி வந்தவர்கள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட காரணத்தினால் சுமார் ஆறு மாத காலங்களுக்கு தங்கம் கடத்தல் திருச்சி விமான நிலையத்தில் குறைந்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அதிக அளவில் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இன்டிகோ விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பெண் பயணியிடம் அணிந்து வந்த புர்காவில் நெய்யப்பட்டிருந்த அலங்கார ஜரிகைகளை சோதனை செய்த போது 24 கேரட் சுத்தமான தங்க ஜரிகைகளால் நெய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட நூல் வடிவிலான 14 துண்டுகளாக எடுக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 251 கிராம் எடையுள்ள தங்கத்தின் மதிப்பு 12 லட்சத்து 84 ஆயிரம் ஆகும்.

இதனைத் தொடர்ந்து தங்கத்தை கடத்தி வந்த பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO