கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
திருச்சி. சிறுகனூரில் அமைந்துள்ள எம்.ஏ.எம்தொழில்நுட்பவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளை பேராசிரியை. முனைவர். ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், முன்னை இணைப் பேராசிரியை பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், 27110/2022, வியாழக் கிழமை தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் முனைவர். எஸ்.ராஜசேகரன், கல்விப் புலத்தலைவர் வரவேற்புரை ஆற்றினார். முனைவர் பி.முருகானந்தம், பதிவாளர்.மாணவர்களிடத்தில் சில திருக்குறள்களை மேற்கோளிட்டு அவற்றை பொருளோடு வாழ்க்கையில் பின்பற்ற வேண்டி வாழ்த்துரை வழங்கினார். முனைவர். எக்ஸ். சூசன் கிறிஸ்டினா, முதல்வர். தன் வாழ்த்துரையில் கல்லூரியில் கொடுக்கப்படும் வசதி வாய்ப்புக்களையும் மாணவர்கள் திறன்களை செவ்வனே வளர்த்துக்கொள்ளும் வழி முறைகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.
தலைமையுரை ஆற்றிய பாத்திமா பதூல் மாலுக், செயளாளர், முதன்மை கல்வி அலுவலர் தங்கள் கல்விக்குழுமத்தின் வரலாற்றினையும் படித்து பட்டம் பெரும்போதே வேலை வாய்ப்பிற்காக தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் முன்வைத்தார். தொடக்கவுரை ஆற்றிய பேராசியை முனைவர் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவருக்கே உரித்த கண்டிப்போடு கலந்த கனிவான முறையில் மாணவர்கள் முதல் நாளிலிருந்து செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகளை பட்டியலிட்டு அதன்படி படிப்பில் கவனம் கொண்டு கல்லூரியில் பயின்று வந்தால் அனைவருக்கும் வானம் வசப்படும் எனவும் இன்னும் பத்து ஆண்டுகளில் அம் மாணவர்களில் பலர் விழா நாயகர்களாக வரும் நாளில் அவர்களிடத்தில் கையொப்பம் பெற இருக்கும் ஆசையைக் கூறி அனைவருக்கும் வாழ்த்துக்களை வழங்கினார். முனைவர் என்.சைவராசு, தலைவர்; அறிவியல் மானுடவியல் துறை நன்றியுரை ஆற்றினார். விழா ஏற்பாடுகளை முதலாமாண்டு பேராசிரியர்கள் குழுவாக பணியாற்றி செய்திருந்தனர். இந் நாளை நினைவு கூறும் வகையில் பல்வறு மரக்கன்றுகளை பெற்றோர்களும் மாணவர்களும் சுல்லூரி வளாகத்தில் நட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO