திருச்சியில் சிறுத்தை நடமாட்டம் - வனத்துறையினர் எச்சரிக்கை
திருச்சி மாவட்டம் எல்லையில் அமைந்துள்ள கொல்லிமலை பகுதியில் குண்டூர் நாடு, குண்டலி நாடு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.
இதனையடுத்து வனத்துறையினர் நடத்திய சோதனையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சேந்தமங்கலம் போலீசார் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலோ, நடந்தோ தனியாக செல்ல வேண்டாம் எனவும், அடர்ந்த வனப்பகுதிகளில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் உள்ள குண்டூர் நாடு, குண்டலி நாடு பகுதிகள் உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொப்பம்பட்டி பகுதியில் உள்ள சூக்கலாம்பட்டி, கல்லாத்து கோம்பை, புளியஞ்சோலை நாக நல்லூர் பகுதியை ஒட்டி உள்ளதால், அப்பகுதிகளிலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision