தூய்மை தினம்- திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆய்வு

தூய்மை தினம்- திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆய்வு

தமிழக காவல்துறை இயக்குநர் உத்தரவின்பேரில், திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்கள், காவல்துறை அலுவலங்கள், காவலர் குடியிருப்புகள் மற்றும் காவல்துறைக்கு சொந்தமான நிலங்களை தூய்மையாக பாதுகாத்து பராமரிக்கும் பொருட்டு, மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமையை ‘தூய்மை தினமாக” கடைப்பிடிக்குமாறும், தலைமை பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று 09.04.2022ந் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகர ஆயுதப்படைக்கு வருகை தந்து, அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த தூய்மை பணி மற்றும் துப்புரவு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கு நடைபெறும் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டு, காவல் ஆளிநர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் திருச்சி மாநகரத்தில் உள்ள அமர்வு நீதிமன்ற காவல் நிலையம், கண்டோன்மெண்ட் போக்குவரத்து காவல் நிலையம், தில்லைநகர் காவல் நிலையம், கோட்டை சிந்தாமணி காவலர் குடியிருப்பு வளாகம் மற்றும் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றில் நடைபெறும் தூய்டை பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும் தூய்மை பராமரிப்பு பணியை செம்மையாக செயல்படுத்தி காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றை நல்ல முறையில் பராமரிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து , திருச்சி மாநகரில் இதுபோன்று ஒவ்வொரு மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமையை தூய்மை தினமாக கடைப்பிடிக்குமாறு ஆய்வின்போது உடனிருந்த காவல் துணை ஆணையர்கள் (வடக்கு மற்றும் தெற்கு) மற்றும் காவல் உதவி ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO