திருச்சியில் 1.00 ஹெக்டேர் பரப்பளவில் மரகத பூஞ்சோலை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(14.08.2024) தலைமை செயலகத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் உள்ள 75 மரகத பூஞ்சோலைகளை திறந்து வைத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டாரம், பொய்கைப்பட்டி திட்ட கிராமத்தில் 1.00 ஹெக்டேர் பரப்பளவில் (2023-24) ஆம் ஆண்டில் வனத்துறை மூலம் பூங்கா அமைக்கும் பணியானது பல்வேறு உள் கட்டமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பூங்காவானது பொய்கைமலை காப்புக்காட்டிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் மணப்பாறையிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.
உள்ளூர் மக்கள் எளிதில் பயன் அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி தலைமை வனப்பாதுகாவலர் ந.சதீஷ் (இ.வப) அறிவுரையின்படி, மாவட்ட வன அலுவலர் சீ.கிருத்திகா (இ.வ.ப) தலைமையில், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமத் அவர்களால் இன்று (14.08.2024) காலை 11:00 மணியளவில் மரகத பூஞ்சோலை நல்ல முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.
மொத்தம் 62 வகையான சுமார் 700 மரக்கன்றுகள் பல்லுயிர் பெருக்கம் ஏற்படுத்தும் வகையில் கனி தரும் மரத்தோட்டமும் மருத்துவ குணம் வாய்ந்த மரங்களும் மற்றும் 41 வகையான பல்லுயிர் மரத்தோட்டமும் உருவாக்கபட்டுள்ளது. இப்பூங்காவின் நுழைவு வாயிலின் வலது பக்கத்தில் ஒவ்வொரு ராசிக்கும் உகந்த செடிகளை கொண்டு வட்ட வடிவிலான ஒரு ராசி வனம் உருவாக்கபட்டுள்ளது. இப்பூங்காவானது பசுமை போர்வையை அதிகரிக்கவும் பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கவும் மக்களுக்கு ஓர் இயற்கையான சூழலில் பொழுதுபோக்கு இடமாகவும் இருக்கும்.
மேலும் இவ்விழாவில் நகராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி ராமசாமி, மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.முகமது பரூக் மற்றும் பி.சக்திவேல், பொய்கைப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரோஸ்லின் சகாயமேரி ராஜசேகர் மற்றும் பண்ணப்பட்டி பஞ்சாயத்து தலைவர், ஊர்பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், மணப்பாறை வனச்சரக அலுவலர், வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் வனக்காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision