திருவெறும்பூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற வைகாசி திருவிழா

திருவெறும்பூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற வைகாசி திருவிழா

திருச்சி திருவெறும்பூர் பாரதிபுரம்   சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட கூடாது என்ற உத்தரவின் பேரில் பக்தர்கள் இன்றி கோவிலின் நடை சாத்தப்பட்ட நிலையில், அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் மட்டுமே கலந்து கொண்டு எட்டுகால யாகசாலை பூஜை நடைப்பெற்றது.

நேற்றைய தினம் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுப்பிரமணிசுவாமிக்கு விஷேஷமாக பூஜைகள் நடைப்பெற்றன. பால், தயிர், இளநீர் அபிஷேகமும், கலஷா அபிஷேகமும் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து மாலை சுப்பரமணி சுவாமியின் ஊஞ்சல் உற்சவம் நடைப்பெற்றுள்ளது.

ஐம்பதாண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் திருமண தடைகள் நீக்குவதற்கு பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோயின் மற்றொரு சிறப்பு கிருபாநந்த வாரியார் சுப்ரமணிய சுவாமிகளை வணங்கி அருப்பெற்ற தலமாகும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx