அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டுமான பணியை அமைச்சர் நேரில் ஆய்வு

அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டுமான பணியை அமைச்சர் நேரில் ஆய்வு

  தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ 56.47 கோடி மதிப்பிட்டில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டும் பணிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ல் அடிக்கல் நாட்டினார் அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் இறுதி கட்டிட பணிகளை பார்வையிட்டார்.

      திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டுமான பணியை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்

               மேலும் இந்த ஆய்வின்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி சுதன் மற்றும் திருச்சிபொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் உதவி பொறியாளர் சாருக்க்ஷா பேகம் செயற்பொறியாளர் அன்பரசி மற்றும் துவாக்குடி நகர் மன்ற தலைவர் காயம்பு மற்றும் துவாக்குடி நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision