நம் கட்டும் வரிப்பணத்திற்கு அரசு செலவு செய்கிறது இலவசம் அல்ல உரிமை - திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினர் சார்பில் நடைபெற்ற ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி திரு எம் கிறிஸ்டோபர் அவர்கள் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் நீதித்துறை நீதி மட்டும் வழங்குவதற்கு அல்ல மக்களுக்கு தேவையான பல்வேறு விஷயங்களை செய்வதற்கும்,துணை நிற்பதற்கும் தேசிய சட்ட ஆணைக்குழு வை உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியது. அதனுடைய கிளைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில சட்டக் குழு என்ற அமைப்பு உள்ளது
ஒரு நீதிமன்றத்தில் நீதிபதி மட்டுமே பொறுப்பாளராக இருப்பார்.ஆனால் சட்டமன்ற ஆணைக்குழுவில் மாவட்ட முதன்மை நீதிபதியும் அந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் இதர அரசு அதிகாரிகளும் சேர்ந்த குழு தான் இக்குழு. சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
நமக்கு நாமே சட்டங்கள் ஏற்றிக் கொண்டு 73 ஆண்டுகள் ஆகிவிட்டது. சட்டமானது இந்தியாவில் பிறந்த "இந்திய குடிமக்கள் அனைவரும் சமம்"இவ்வார்த்தையை உயர்த்தி பிடிப்பது தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம். அது மட்டுமல்லாமல் சட்டத்திற்கு முன்பும் அனைவரும் சமம் என்று கூறுகிறது.
சட்டத்தின் மூலம் கிடைக்கப்படும் நீதியானது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் எந்த ஒரு துஷ்பிரயோகமும் இருக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் தலைசிறந்த நீதிபதி விஆர் கிருஷ்ண ஐயர் சட்டத்தை எல்லா மக்களாலும் நுகர முடியவில்லை எல்லா மக்களிடமும் சட்டத்தை சேர்க்க வேண்டும் என்பதற்காக சட்ட உதவி மையம் என்பதை உருவாக்கினார்.
சட்டமானது யாரெல்லாம் தங்கள் பொருளாதார சூழ்நிலையை சூழ்நிலையால் சட்டத்தை அனுபவிக்க முடியாமல் இருக்கிறார்களோ அவர்களுக்காக இக்குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழு இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அனைத்து இடங்களிலும் உள்ளது.
சட்டமானதுக் பெண்கள் குழந்தைகள் அரசு வரையறுக்கப்பட்ட வருமானத்திற்கு கீழ் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிகழ்ச்சி வெறும் மரம் நடுவதற்கு மட்டுமல்ல நீதித்துறையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான அனைத்து அமைப்புகளையும் அரசு மூலமாக கிடைக்கக்கூடிய அனைத்து உதவிகளையும் மக்களுக்கு எடுத்துச் செல்வது ஆகும்.
இலவசம் என்றாலே அதை அனுபவிப்பதற்கு நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். ஆனால் சாலையில் ஓட்டும் வாகனத்திலிருந்த வரி செலுத்திக் கொண்டிருக்கிறோம். நம் பணத்தை எடுத்து நமக்கு தான் செலவு செய்கிறது அரசு. சட்டப்பணிக் ஆணைகுழு செயல்பட்டு வருகிறது. இதில் மூத்த வழக்கறிஞர்களும் உறுப்பினராக இருக்கின்றனர். சட்ட தன்ஆர்வலர்கள் என்று சொல்லக்கூடிய அவர்களையும் இக்குழு வைத்துள்ளது. மக்களுக்கு கிடைக்கக்கூடிய அரசு சலுகைகளை சரியாக கிடைப்பதற்கு இக்குழுவும் வழக்கறிஞர்களும் தன்னால் தன் ஆர்வலர்களும் உதவி செய்கின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision