சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன சோதனை சாவடி தொடக்கம்
ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் சோதனை சாவிடி காவிரி பாலம் ஓயாமரி செல்லும் எண்.5 அமைக்கப்பட்டு வாகனத்தணிக்கை செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில், திருச்சி காவல் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சென்னை-திருச்சி செல்லும் தேசியநெடுஞ்சாலை, ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Y ரோடு ஜங்சன் பகுதியில் காவல் சோதனை சாவடி எண்.5 அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தது.
இதனைத் தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட இடத்தில் வாகன எண்களை கண்டறியும் தானியங்கி கேமராக்கள்-2 மற்றும் பொது முகவரி அமைப்பு (PA System) ஒலிப்பெருக்கிகளுடன் கூடிய இரும்பு தடுப்பான்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அதிநவீன காவல் சோதனை சாவடி எண்-5ன் புதிய கட்டிடம் 03.01.23-ஆம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர்G.கார்த்திகேயன், தொடங்கி வைத்தார்.இங்கு 24 மணி நேரமும் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.
இந்த அதிநவீன காவல் சோதனை சாவடி எண்-5ஆனது இப்பகுதியில் நிறுவப்பட்டதினால், திருச்சி நகருக்குள் வரும் வாகனங்களையும், வெளியேறும் வாகனங்களையும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு, குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், சட்ட விரோத நபர்களை கண்காணிக்கவும், ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லையில் உள்ள திருவானைக்கோவில் அழகிரிபுரம், திம்மராயசமுத்திரம், கொண்டயம்பேட்டை, கல்லணை ரோடு, திருவளர்ச்சோலை ஆகிய இடங்களில் நடைபெறும் குற்றசம்பவங்களை முன்கூட்டியே தெரிந்து தடுக்கவும் ஏதுவாக அமைந்துள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO