திருச்சியில் "சங்க பெண்ணே" மகளிர் தின விழா

திருச்சியில் "சங்க பெண்ணே" மகளிர் தின விழா

திருச்சி மாவட்ட வீடியோ & போட்டோ ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் திருச்சி ஸ்ருதி ஹாலில் சங்க பெண்ணே மகளிர் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இணைந்த மகளிரை போற்றவும், இணையும் மகளிரை வரவேற்கும் விதமாக அமைந்தது. இன்று உறுப்பினராகும் மகளிருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்டம் வீடியோ மற்றும் போட்டோ ஒளிபதிவாளர்கள் சங்கம் நடந்திய சங்கபெண்ணே என்னும் நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றது. ஏராளமான புதிய மகளிர் உறுப்பினர்கள் இன்று போட்டோ வீடியோ ஒளிபதிவாளர் சங்கத்தில் இணைந்தார்கள். இதை மாவட்ட தலைவர் ஆதி சரவணன் ஏற்பாடு செய்திருந்தார் மற்றும் நிர்வாகத்தினர் அனைவரும் உடன் இருந்தனர்.

இந்த விழா திருச்சி மாவட்டம் சுற்றிய மணப்பாறை, முசிறி, குளித்தலை, துறையூர், திருவெறும்பூர் உள்ளடக்கிய சுற்றுப்புறத்தை கொண்டது. இந்த சங்கத்தில் 1000கும் மேற்ப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த புதிய மகளிர் உறுப்பினர்கள் இணைக்கும் திட்டமும் மகளிருக்கான அங்கீகாரம் திட்டமும் மாநில அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision