திருச்சி மாவட்ட வீடியோ & போட்டோ ஒளிப்பதிவாளர் சங்கத்தின் பொங்கல் விழா

திருச்சி மாவட்ட வீடியோ & போட்டோ ஒளிப்பதிவாளர் சங்கத்தின் பொங்கல் விழா

தமிழர் திருநாள் விழா திருச்சி மாவட்ட வீடியோ & போட்டோ ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் திருச்சி தில்லைநகர் கிஆபெ பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய கட்டுமானர் சங்க திருச்சி மைய தலைவர் ஆர் வி எஸ் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உடன் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாகி சுபா பிரபு கலந்து கொண்டனர். 

விழாவினை மாவட்ட தலைவர் ஆதி சரவணன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் துரை பாஸ்கர் மற்றும் மாவட்ட பொருளாளர் ரம்ஜான் ஆகியோர் முன்னிலையில், இந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு மாடு மற்றும் சிலம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகள் குழந்தைகளிடம் காட்டப்பட்டது. மேலும் எல்லோரும் பொங்கல் படைத்து வழிபாடு செய்தது தமிழரின் பண்பாடுக்காக ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறினார். 

மேலும் இந்த விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த திருச்சி மாவட்ட சங்கம் எல்லா உறுப்பினர்களுக்கும் மிக பெருமையாக அமைந்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision