சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட கொடியேற்றம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட கொடியேற்றம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் விழாவை முன்னிட்டு கொடியேற்றம் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலம் சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும்.

இப்பிரசித்திப் பெற்ற கோயிலில் அமைந்துள்ள அம்மன் உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்வித நோய்களும், தீவினைகளும் அனுகாது, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை மரபிற்கு மாறாக அம்மன் தன்னைத் தானே வருத்திக் கொண்டு 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இத்தலத்தின் சிறப்பு.

இந்த பச்சை பட்டி விரதம் பூரணம் அடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய ஐந்தொழில்களையும் சித்திரை திருவிழா நாட்களில் அம்மன் செய்வதாக ஐதீகம். இக்கோயில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேரோட்ட திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். நிகழாண்டில் வருகின்ற 19ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. இத்தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா காலையில்   கோயில் சிவாச்சாரியர்கள் கோயிலில் அமைந்துள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கோயிலின் கொடி மரத்தில் அம்மன் படம் பொருந்திய கொடியினை ஏற்றினர்.

இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையர்  மற்றும் சிவாச்சாராரியர்கள், கோயில் பணியாளர்கள் பக்தர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து இரவு அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி திருவீதி உலா கண்டருளி மூலஸ்தானம் சேர்தல் நடைபெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO