சத்திரம் பேருந்து நிலையத்தில் புகையிலை பொருட்கள் விற்க கடைக்கு சீல்

சத்திரம் பேருந்து நிலையத்தில் புகையிலை பொருட்கள் விற்க கடைக்கு சீல்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அன்ப்ரா டீ ஸ்டால் என்ற கடைக்கு உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் அவசர தடையாணை உத்தரவின்படி திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கொண்ட குழுவால் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த அன்ப்ரா டீ ஸ்டால் கடையில் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. 21.10.2021 அன்று முதல் அவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை அறிந்து ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் 10.03.2022 அன்று ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அன்றைய தினம்  அவசர தடை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் அவசர தடையை வழங்கியதன் அடிப்படையில் அந்த டீக்கடைக்கு சீல் செய்யப்பட்டது.

மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2005 இன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடைக்கு சீல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO