திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன சோதனை சாவடி 

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன சோதனை சாவடி 

திருச்சி மாநகர, எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லை பழைய மதுரை சாலை, கிருஷ்ணாபுரத்தில் செயல்பட்டுவந்த சோதனைச்சாவடி எண்-2, பொது மக்கள் நலனிற்காக மாநகர எல்லையை ஒட்டிய மாற்று இடம் திருச்சி மேற்கு வட்டம், பஞ்சப்பூர் கிராமம், மதுரை தேசிய நெடுஞ்சாலை எண்.38, பஞ்சப்பூர் நான்கு வழி சந்திப்பில் புதிய சோதனு சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு தானியங்கி வாகன எண்களை கண்டறியும் கேமராக்கள், நான்கு CCTV கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கிகளுடன் கூடிய Public Addres System, சூரிய மின் விளக்குகளுடன் கூடிய (Solar System) இரும்பு தடுப்பான்கள், தடையில்லா மின்சார வசதி மற்றும் கழிப்பறையுடன் கூடிய அதிநவீன சோதனைச்சாவடிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் சோதனை சாவடி எண்-2 கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திறந்து வைத்தார்.

இந்த புதிய கட்டிடம் மற்றும் ANPR Camera-க்கள் Bunge India Private Limited நிறுவனத்தின் சமூக பங்களிப்பாக (CSR) காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், திருச்சி மாவட்ட ஆட்சியர் S.சிவராசு துணை ஆணையர் (தெற்கு), R.முத்தரசு, கண்டோன்மெண்ட் காவல் சரக உதவி ஆணையர் அஜய் தங்கம், மற்றும் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய ஆய்வாளர் S.பாலகிருஷ்ணன்

கண்டோன்மெண்ட் காவல் சரக காவல் ஆளினர்கள் மற்றும் புங்கே தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அதிநவீன சோதனை சாவடியானது எடமலைப்பட்டிபுதூர் காவல் ஆளினர்களைக் கொண்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும், செயல்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் குற்ற தடுப்பு நடவடிக்கைக்கு ஏதுவாக வாகன சோதனைகள் செய்வதற்கும், பொதுமக்கள் விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ளவும் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO