திருச்சியில் 17 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு

திருச்சியில் 17 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சின்னசேலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் 4 மாதங்களுக்கு முன் இயற்கை எய்தினார். இவருடைய 17 வயது மகள் இரண்டு நாள்களுக்கு  முன் சோகமாக இருந்ததாகவும், அதனால் தன் தந்தையின் சமாதியில் சென்று மன ஆறுதலுக்காக வணங்கி வருவதாகவும் தன் தாயிடம் கூறி சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் இரவு வரை வீடு திரும்பவில்லை. அதனை தொடர்ந்து இன்று அப்பகுதியில் உள்ள கினற்றில் பெண் சடலாமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஊர் மக்கள் மற்றும் சுந்தரம் மனைவி சென்று பார்த்த போது அதுகாணமல் போன தன் மகள் என்பதை அறிந்து சிறுமியின் உடலை மீட்டு  துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO