வெள்ளிப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரருக்கு பாராட்டு

வெள்ளிப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரருக்கு பாராட்டு

நொய்டாவில் கடந்த நவம்பர் மாதம் 6 தேதி முதல் 11 ம் தேதி வரை நடைபெற்ற இந்தியாவின் முதல் சர்வதேச சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கத்தை வென்ற திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் ரமேஷ் மற்றும் அவரது குழுவினர் தமிழகத்திர்க்கும் திருச்சி மாவட்டத்திர்க்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கெளரவ தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கூடைபந்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் ரமேஷ் அவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

  பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரான ரமேஷ் கூறியதாவது,  திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து தனது விடாமுயற்சியால் பல தடைகளை கடந்து பல்வேறு மாநில தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுளதாகவும் கடந்த மாதம் நொய்டாவில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான சர்வதேச கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் மாற்றுதிறனாளி விளையாட்டு வீரர் ரமேஷ் மற்றும் அவரது குழுவினர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

   மேலும் ரமேஷ் தான் டிப்ளமோ மற்றும் பி. எஸ். சி பையோ கெமிஸ்ட்ரி படித்து தற்போது கோவையில் ஒரு தனியார் துறையில் பணியாற்றி வருவதாகவும் தமிழக அரசு தனக்கு எதாவது அரசு பணி வழங்கினால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பயன் அளிக்கும் என்றும் மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி நமது நாட்டிற்கும் தமிழகத்திர்க்கும் பெருமை சேர்க்க பயிற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

  மாற்றுதிறனாளி விளையாட்டு வீரரான ரமேஷ் நொய்டாவில் கூடைப்பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று தமிழகதிற்க்கும் திருச்சி மாவட்டதிர்க்கும் பெருமை சேர்த்த ரமேஷை பாராட்டும் நோக்கில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு நினைவுபரிசு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

  இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கெளரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் எஸ். அண்ணாதுரை அவர்கள் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் ரோட்டரியன் நாகராஜன் வடிவேல் அவர்கள் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் ரமேஷ் அவர்களுக்கு ஊக்க தொகை வழங்கி வாழ்த்தி பாராட்டினார் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் இளங்கோ மற்றும் அமைப்பின் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள விளையாட்டு பயிற்ச்சியாருமான சுரேஷ் பாபு அவர்களும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் இணைச் செயலாளர் அல்லி கொடி அனுஷ்மா நந்தினி மைக்கேல் மேகா பிரணாவ் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்வானது அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் திருச்சி மாவட்ட தலைவர் Er.செந்தில்குமார்  அலுவலகத்தில் நடைபெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO