SDPI கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா

SDPI கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா

SDPI கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்திக் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் பிச்சை கனி ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட பொருளாளர் A.நியமத்துல்லா வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினரும் திருச்சி மண்டல தலைவருமான இமாம்.R.ஹஸ்ஸான் பைஜி கலந்துக் கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வை மாவட்டச் செயலாளர் ஏர்போர்ட் மஜீத் தொகுத்து வழங்கினார். மேலும் SDPI கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மதர்.Y. ஜமால் முஹம்மது M.A.,M.Phil., தளபதி அப்பாஸ், மாவட்ட செய்தி தொடர்பாளர் Dr.S.பக்ருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் K.முபாரக் அலி,இமாம்.சாகுல் ஹமீது இன்ஆமி,SDTU தொழிற்சங்க மாநிலச் செயலாளர் K.முஹம்மது ரபீக்,வர்த்தகர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் MAJ.சாதிக் பாஷா, சமூக ஊடக அணி திருச்சி மண்டல தலைவர் KSA. ரியாஸ், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் மசூதா மரியம்,வர்த்தக அணி திருச்சி மாவட்ட செயலாளர்கள் ஷேக் மற்றும் அப்துல் மாலிக்,கல்வியாளர் அணி மாவட்ட செயலாளர் பதுருஜமான், திருவரம்பூர் தொகுதி தலைவர் அப்பாஸ் மந்திரி, SDTU மாவட்ட செயலாளர்கள் காஜா மொயினுதீன்,சக்கரை மீரான்,சமூக ஊடக அணி தலைவர் உபைதூர் ரஹ்மான்,தொண்டரணி தலைவர் முகமது ஆரிப் உள்ளிட்ட நிர்வாகிகள் செயல்வீரர்கள்,கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.S. அப்துல் காதர் (பாபு) நன்றியுரையாற்றினார்.