கேர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு தினம்

கேர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு தினம்

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் 03 பிப்ரவரி, 2024, அன்று இரண்டாம் ஆண்டு விளையாட்டு தினம் நடைபெற்றது. இவ்விழாவில் கேர் கல்லூரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக செயலர்  பிரதீவ் சந்த் தலைமையேற்றார்.

சிறப்பு விருந்தினராக 1994 ம் ஆண்டு நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியரும், இந்திய விளையாட்டுத்துறையின் உயரிய விருதான அர்ஜுனா விருதினைப் பெற்றவரும், இந்திய தெற்கு இரயில்வே விளையாட்டுத் துறையின் உயர் அதிகாரியமான வெங்கடேசன் தேவராஜன் கலந்து கொண்டு, விழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார். பின், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கினார்.

மேலும் விளையாட்டு மாணவ துறையின் முக்கியத்துவம் குறித்தும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள் பற்றியும், மாணவ மாணவியருக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் து. சுகுமார் கல்லூரியில் விளையாட்டு துறைக்கான ஆண்டறிக்கை வாசித்தார்.

இறுதியாக கல்லூரி தலைமை நிர்வாக செயலர், சிறப்பு விருந்தினர், பேராசிரியர்கள், விழா ஒருங்கினைப்பாளர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் நன்றி உரை கூறினார். விழா நாட்டுபண்ணுடன் விழா நிறைவுற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision