திருச்சி டியூஷன் ஆசிரியர் கைது

திருச்சி டியூஷன் ஆசிரியர் கைது

திருச்சி பீமநகரை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் பணமோசடி தொடர்பாக பல்வேறு வழக்குகள் திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்தில் ஆவணங்கள் தயார் செய்து சமர்பித்துள்ளார். இஸ்மாயில் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்பதை கண்டறிந்த நீதிமன்றம் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. 

இதனையெடுத்து சம்மந்தப்பட்ட பாலக்கரை காவல்நிலைய போலீசார் இஸ்மாயில் மீது 420 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையம் அருகே கலைவாணர் தெருவில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் யூத் ஃபவுண்டேஷன்- 2014 மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே டிரஸ்ட் என்கிற பெயரில் அலுவலகம் திறந்த முகமது இஸ்மாயில் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு இலவச டியூஷன் எடுக்க இளைஞர்கள், பட்டதாரிப் பெண்களை வேலைக்குச் சேர்த்தார். 

அவர்களுக்குச் சம்பளம் தராமல் மாதக்கணக்கில் இழுத்தடித்தார். மேலும், அந்த பகுதியைச் சேர்ந்த மாணவனுக்கு சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மெடிக்கல் சீட் கிடைத்துள்ளதற்கான ஆணைகளை கொடுத்து ஏமாற்றி 11 லட்ச ரூபாய் பணத்தை இஸ்மாயில் வாங்கி ஏமாற்றியது குறிப்பிட்டதக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO