நாளை (24.09.2023) முதல் நான்கே மணிநேரத்தில் சென்னை சென்றடையலாம்!!

நாளை (24.09.2023) முதல் நான்கே மணிநேரத்தில் சென்னை சென்றடையலாம்!!

திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்தேபாரத் ரயில், நாளை (24.09.2023) முதல் இயக்கப்படுகிறது. வீடியோ கான்பரன்சிங் மூலம், பிரதமர் நரேந்திர மோடி, கொடியசைத்து இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த ரயில், வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.

திருநெல்வேலியில் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு 7:13க்கு விருதுநகர், 7:50க்கு மதுரை, 8:40க்கு திண்டுக்கல், 9:50க்கு திருச்சி,11:54க்கு விழுப்புரம், மதியம் 1:13க்கு தாம்பரம் இறுதியாக 1:50க்கு சென்னை எழும்பூர் சேரும். மறுமார்க்கத்தில் மதியம் 2:50க்கு எழும்பூரில் புறப்பட்டு மதியம் 3:18க்கு தாம்பரம், 4:39க்கு விழுப்புரம், 6:40க்கு திருச்சி, இரவு 7:56க்கு திண்டுக்கல், 8:40க்கு மதுரை, 9:13க்கு விருதுநகர், இரவு 10:40க்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயிலில் எக்சிகியூடிவ் பெட்டியில் பயணிப் பதற்கான கட்டணம், உணவு, முன்பதிவு, ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 3 ஆயிரத்து 25 ஆக இருக்கும்.மற்ற பெட்டியில், முன்பதிவு, உணவு, ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் ஆயிரத்து 620 ஆகவும் இருக்கும். இதில் எக்சிகியூட்டிவ் வகுப்பில், உணவு கட்டணம் ரூபாய் 370. மற்ற பெட்டியில் உணவு கட்டணம் ரூபாய் 300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவு வேண்டாம் எனும் பயணிகளுக்கு கட்டணத்தில் இந்த தொகை குறைத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

விமானக் கட்டணத்தை விட குறைவான கட்டணத்தில் விறுவிறுப்பாக சென்னையை சென்றடையலாம் திருச்சி வரலாம் என்பதால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision