அடுத்தாண்டு மாணவர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்ற இந்தாண்டு முதல் வகுப்பு மாணவர்கள்

அடுத்தாண்டு மாணவர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்ற இந்தாண்டு முதல் வகுப்பு மாணவர்கள்

தமிழ்நாடு அரசின் ஆணைப்படி அந்தநல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பேரணி மற்றும் முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை திருச்சி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் வெ.பேபி தலைமையில் நடைபெற்றது.

அங்கன்வாடி ஆசிரியர்கள் தங்கள் மையத்தில் ஐந்து வயது நிறைவு பெற்ற மாணவர்களை அழைத்து வந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாவட்டக்கல்வி அலுவலர் பெற்றோர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர். தற்போது முதலாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புதிய மானவர்களை மலர் கொடுத்து கையைப் பிடித்து அழைத்து வந்து இருக்கையில் அமர்த்தி வைத்தனர்.

பேரணியில் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மீனா, தலைமை ஆசிரியர் சகாயம் மேரி சந்திரா, உதவி ஆசிரியர்கள் மலர்விழியாள், கலைச்செல்வி, லூமின் ஜார்ஜினா, கிருபா, உஷா கீதா பெல் சிட்டா மற்றும் அல்லூர் அங்கன்வாடி கைக்குடி அங்கன்வாடி அமைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி நித்தியா மீனா கீர்த்தனா வார்டு உறுப்பினர்கள் சதீஷ் மற்றும் பெற்றோர்கள் கணேஷ், கண்ணன்,

 கல்வியாளர் மோகன், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டவர்கள். 30 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பதாகைகளாக உயர்த்திப் பிடிக்கப்பட்டன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision