திருவெறும்பூர் மலைக்கோயிலின் தெப்பக்குள சுற்றுச்சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து குளத்திற்குள் விழுந்தது

திருவெறும்பூர் மலைக்கோயிலின் தெப்பக்குள சுற்றுச்சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து குளத்திற்குள் விழுந்தது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே எறும்பீஸ்வரர் ஆலயம் என்றழைக்கப்படும் மலை கோவில் உள்ளது. இந்தக் கோவில் எதிரே உள்ள தெப்பக்குள சுற்றுசுவர் பழுதடைந்து மிகவும் மோசமாக இருந்தது. மேலும் அந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருவதற்கு ஏதுவாக தெப்பகுள சுற்று சுவரில் திருச்சி மாநகராட்சி சார்பில் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தது.

ஆனால் அது பழுதடைந்து சரிவர எரியவில்லை. இந்த நிலையில் திருவெறும்பூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தெப்பகுளத்தின் மேற்கு பகுதியில் உள்ள சுற்று சுவர் இடிந்து தெப்பகுளத்தில் விழுந்தது.

இதனால் அந்த பகுதி இனி இரவு நேரங்களில் இருட்டாக இருப்பதுடன் அந்த பகுதியில் வரும் வாகனங்கள் சாலை தெரியாமல் தெப்பகுளத்திற்குள் விடும் அபாயமும் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் திருவெறும்பூர் மலைக் கோவில் தெப்பக்குளத்தில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக சுற்றுச்சுவர் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இருபத்தி எட்டு ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காமல் இருப்பதாலும் அதனை அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து கோவில் திருப்பணிகளை தொடங்க வேண்டும் என்றும் , கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இயற்கை உபாதை கழிக்க கழிவறை கட்டி தர வேண்டும் என்றும், வயது முதிர்ந்த பக்தர்கள் மலையேறி செல்வதற்காக கைப்பிடி அமைத்து தருமாறும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn