காந்தி சந்தையை திறக்கக்கோரி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்!

காந்தி சந்தையை திறக்கக்கோரி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்!

திருச்சியில் ஒரு முக்கிய பிரச்சனையாக காந்தி மார்க்கெட் - கள்ளிக்குடி மார்க்கெட் விவகாரம் உருவெடுத்துள்ளது. வியாபாரிகள் ஒருபுறம் காந்தி மார்க்கெட்டில் திறக்க வேண்டும் என்றும் மறுபுறம் சில வியாபாரிகள் கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும் என இருபுறமாக விவாதம் நடத்தி வருகின்றனர். 

Advertisement

கொரோனா ஊரடங்கு ஆரம்பமான காலகட்டத்தில் காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் பால் பண்ணைக்கு மாற்றப்பட்டது. பின் சமூக இடைவெளி கடைபிடிக்காததால் மீண்டும் ஜி கார்னர் பகுதிக்கு மொத்த வியாபாரம் மாற்றப்பட்டு இன்று வரை அங்குதான் வியாபாரம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்சி காந்தி சந்தையை திறக்க கோரி வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.