திருச்சியில் வெங்காய மண்டிக்கு எகிப்து வெங்காயம் 25 டன் இறக்குமதி - வெங்காய மண்டி செயலாளர் தங்கராஜ் தகவல்!

திருச்சியில் வெங்காய  மண்டிக்கு எகிப்து வெங்காயம் 25 டன் இறக்குமதி -  வெங்காய மண்டி செயலாளர் தங்கராஜ் தகவல்!

திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காயம் மண்டிக்கு 25 டன் எகிப்திலிருந்து வெங்காயம் வந்து இறங்கியுள்ளது. மொத்த விற்பனையில் கிலோ 55 ரூபாயாக விற்கப்பட்டு வருகிறது.

Advertisement

வெங்காய மண்டியில் நாளொன்றுக்கு பெரிய வெங்காயம் ( மகாராஷ்டிரா கர்நாடகா )200 டன்னும், சின்ன வெங்காயம் (பெரம்பலூர், துறையூர், கோவை பகுதியில்) 50 டன் வருகிறது.  

பெரிய வெங்காயத்தின் தேவை என்பது 350 டன்னாகவும் சின்ன வெங்காயத்தின் தேவை 250 டன்னாகவும் உள்ளது. சின்ன வெங்காயம் தற்போது மொத்த விற்பனையில் 90 ரூபாய் ஆகவும், சில்லரை விற்பனையில் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.   

Advertisement

பெரிய வெங்காயம் தற்போது 70 ரூபாய் மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது . சில்லரை விற்பனையில் கிலோ 80 ரூபாயாக உள்ளது. மேலும் எகிப்திலிருந்து 25 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் திருச்சி வெங்காய மண்டி செயலாளர் தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.