திருச்சியில் 13 குழந்தைகள், 9 ஆசிரியர்கள் கொரோனா பாதிப்பு, 16 பேருக்கு டெங்கு - மாவட்ட ஆட்சியர் பேட்டி
திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் மற்றும் லால்குடி, முசிறி பேரூராட்சிகள், நகராட்சிகளாக உயர்வாக்கம் குறித்தான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் நிறைவிற்கு பின் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்... திருச்சி மாவட்டத்தில் பள்ளிகள் திறந்தது முதல் இதுவரை 13 குழந்தைகள், 9 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், கொளக்குடியில் 6 பேருக்கு பாதிக்கப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 ஆயிரத்து 655 நபர்கள் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 1ம் தேதி முதல் இதுவரை 16 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த காலங்களை ஒப்பிடும் வகையில் குறைவாகவே பதிவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையினையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn