கருத்துக்கேட்பு கூட்டம் நடப்பதாக கூறி அழைக்கவில்லை, தங்களிடம் எவ்வித கருத்தும் கேட்கவில்லை - திருச்சி கீழக்குறிச்சி ஊராட்சி மக்கள் குற்றசாட்டு

கருத்துக்கேட்பு கூட்டம் நடப்பதாக கூறி அழைக்கவில்லை, தங்களிடம் எவ்வித கருத்தும் கேட்கவில்லை - திருச்சி கீழக்குறிச்சி ஊராட்சி மக்கள் குற்றசாட்டு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்டு 65 வார்டுகள் உள்ளன. இதனை 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது முதல் பல ஊராட்சி மற்றும் பேரூராட்சி கிராமங்களிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்கள் முன்பு முற்றுகை மற்றும் ஆர்பாட்டங்களும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் மற்றும் லால்குடி, முசிறி பேரூராட்சிகள், நகராட்சிகளாக உயர்வாக்கம் குறித்தான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். இதில் மாநகராட்சி மற்றும் பேரூராட்சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பும், ஆதரவு கருத்துக்களை பதிவு செய்ததுடன், விவசாயத்தை நம்பியுள்ள மக்களும், விவசாயமும் பாதிப்படைவதுடன், 100நாள் பணியை நம்பியுள்ள மக்களும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர். 

இக்கூட்டத்தின் நிறைவிற்கு பின் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்... வருகிற 2024 வரையிலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிகள் செல்லும், விவசாய பணிகள் இல்லாத பகுதிகள் மற்றும் மக்கள் தொகை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அரசுக்கு கருத்துக்கள் அனுப்பப்படும். 32 கிராமங்களில் 3 கிராமங்கள் மட்டுமே விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏனைய பகுதிகளில் விளைநிலங்களாக மாறிய நிலையில் விவசாய தொழிலாளர்கள் இல்லையென்பதை ஆய்வு செய்து தெரிவிக்க உள்ளோம். அக்டோபர்-2ல் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்திலும் மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். வளர்ச்சியடையும் பட்சத்தில் அரசு ஆய்வு செய்து மாற்றங்கள் மேற்கொள்வது அவசியமாகும். 

இக்கூட்டம் முடிந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்ற பின்னர் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தங்களை கருத்துக்கேட்பு கூட்டம் நடப்பதாக கூறி அழைக்கவில்லை என்றும், தங்களிடம் எவ்வித கருத்தும் கேட்கவில்லையென்றும், தலைவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு மாநகராட்சியாக விரிவாக்கம் செய்ய கையெழுத்திட்டுள்ளதாகவும் கிழக்குறிச்சி மக்கள் குற்றம்சாட்டினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn