பால் விற்பனை விலை உயர்வு சொசைட்டியை முற்றுகையிட்ட அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர்

பால் விற்பனை விலை உயர்வு  சொசைட்டியை முற்றுகையிட்ட அதிமுக  மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரப் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளசுற்று பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பால் சுமார் நாள் ஒன்றுக்கு 21 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு ஆவணுக்கு 14 லட்சம் லிட்டர் ஏற்றுமதியும் மீதி உள்ள ஏழு லட்சம் பாலை சில்லரை விற்பனைக்கு பயன்படுத்தி வருகின்றனர். 

இதில் பால் கொள்முதல் விலையாக 33.50 பைசாவுக்கும் இருந்து தற்போது அரசு உயர்த்தி உள்ள மூன்று ரூபாய் கூடுதலாக பெற்று 36.50 ரூபாய்க்கு பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் விலை உயர்வு ஏற்றப்படாத நிலையில் மணப்பாறை பால்ஸ் கூட்டுறவு சொசைட்டிலிருந்து விற்பனை செய்யப்படும் பால் லிட்டர் ரூபாய் மூன்று ரூபாய் உயர்த்தி பொதுமக்களுக்கு சில்லரை விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 

இதனை அடுத்து இன்று பால் கூட்டுறவு சங்கத்திற்கு வந்த அதிமுக நகர செயலாளர் ராமமூர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் அதிமுக நிர்வாகிகள் ராமன், ராமச்சந்திரன், ராஜா அப்பாஸ், மற்றும் கட்சியினர் கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு சங்க அலுவலக செயலாளரிடம் விலை ஏற்றம் குறித்து கேள்வி எழுப்பினர்.

சங்க செயலாருக்கு ஆதரவாக பால் விற்பனையாளர்கள் வந்ததையடுத்து கட்சியினருக்கும் பணியாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமாதனம் அடைந்து சங்க செயலாளர் தங்கவேல் அதிகாரிகளிடம் பேசி பால் விற்பனை விலையை குறைத்துக் கொள்வதாக உறுதியளித்தை தொடர்ந்து கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கொள்முதல் பால் விலை ஒரு லிட்டர் 36.50 விவசாயிகளிடம் வாங்கி பொதுமக்களுக்கு ரூபாய் 45-க்கு விற்கப்பட்ட நிலையில் லிட்டர் 3 ரூபாய் உயர்த்தி 48 ரூபாய்க்கு விற்கப்பட்டுகிறது.

மேலும் சில்லறை தட்டுப்பட்டால் சில்லறை விற்பனையில் 50 ரூபாய வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலேயே பால் விலை உயர்வு உயர்த்தப்பாத நிலையில், மணப்பாறை பகுதியில் பால் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision