100% வாக்களிப்பு வானில் பறந்த 5000 ஹீலியம் பலூன்கள் - வண்ணமயம்
வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் வகையில் திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5000 மாணவிகள் மூவர்ண ஆடைகள் அணிந்து மைதானத்தில் ஒருங்கே தேர்தல் ஆணையத்தின் லோகோ வடிவில் கைகளில் ஏந்திநின்ற ஹீலியம் பலூன்களை வானில் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் தலைமையில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவரும் பங்கேற்று தேர்தலில் தவறாது வாக்களிப்போம், இதனை மக்களிடம் கொண்டு சேர்த்து 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்வோம் என உறுதிமொழி ஏற்றனர்.
100% வாக்களிப்பை எட்ட வேண்டும் என்றால் அனைவரது பங்களிப்பும் முக்கியம், இது தொடர்பான விழிப்புணர் நிகழ்ச்சிகள் திருச்சியில் ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் பட்சத்தில் சரித்திர நிகழ்வாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 100% வாக்களிப்பை ஏற்றுவதற்கு வாய்ப்பாக அமையும். அதனால் மக்கள் அனைவரும் மறவாது 19ஆம் தேதி அன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision