திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் பாஜக, தேமுதிக, அதிமுவை சேர்ந்த கலைச்செல்வி, தியாகு, கதிரவன், கஜேந்திரன், தர்மதுரை, பாரதிராஜா உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார். 

இந்தநிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம் எல் ஏ, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளார் மேயர் அன்பழகன், ஒன்றிய செயலாளார்கள் திருஞானம், தங்கவேல், நகர செயலாளர் விஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision