திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் 19 ஆவது பட்டமளிப்பு விழா
திருச்சி அரசு மருத்துவமனையில் இளநிலை மருத்துவ படிப்பு முடித்த 152 மருத்துவ மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. 19வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக மருத்துவ துறை இயக்குனர் நாராயண பாபு படித்து முடித்த 152 இளநிலை மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். இரண்டு வருடமாக கோவிட் பெருந்தொற்று காலத்தால் பட்டமளிப்பு விழா மூலம் மருத்துவ மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் போனது.
மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற மாணவர்கள் பொறுமையாக இருந்து நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்றார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக ஆக்சிஜன், படுக்கை வசதி கொண்ட மருத்துவ வசதிகள் கூடுதலாக அரசு மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ளது .
பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். இவ்விழாவில் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO