தமிழக நிதி அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு
திமுக திருச்சி மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் ஏ.கே.அருண் தலைமையில் திருச்சி மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் திருச்சி மத்திய மாவட்ட DMK IT WING மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்.
நேற்று (19-09-2021) இரவு சமூகவலைத் தளங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாக உண்மைக்குப் புறம்பாக, நியூஸ் 7 தொலைக்காட்சி பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட நியூஸ் கார்டு கீழ்க்கண்ட டிவிட்டர் முகவரியில் https://twitter.com/SowdhaMani7/header_photo இருந்து பகிரப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
தனது சிறப்பான கல்வி, அறிவாற்றலால் ஆற்றிவரும் அளப்பரிய பணிகளால், உலகளவில் அமைச்சர் அவர்களுக்குப் பெருகிவரும் புகழையும், மரியாதையையும், மக்கள் செல்வாக்கையும் பொறுத்துக் கொள்ள முடியாமல், திரிக்கப்பட்ட செய்திகள், போலி போட்டோசாப்கள் மூலம் அவதூறு பரப்பி, அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயலும் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஸ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பாலா, திருச்சி மேற்கு தொகுதி அமைப்பாளர் கோவிந்தசாமி, திருச்சி மேற்கு தொகுதி சமுக வலைதள அமைப்பாளர் ஆசிக், லால்குடி தொகுதி சமுக வலைதள அமைப்பாளர் தமிழ் கொடியாலம் ஊராட்சி அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn