தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி மற்றும் இனிப்பு பலகார வகை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி மற்றும் இனிப்பு பலகார வகை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

  திருச்சிராப்பள்ளி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக வரும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பலகாரவகைகள், இனிப்புகள் கார வகைகள், கேக்குகள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், உள்ள விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் சட்ட மன்ற அறிவிப்பு விழிப்புணர்வு திங்கள்  காலை11.00 மணியளவில் ஹோட்டல் சங்கீதாஸ்-ல் வைத்து நடைபெற்றது. அதில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, அந்தநல்லூர் மற்றும் மணிகண்டம் வட்டாரம், திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி, லால்குடி, புள்ளம்பாடி மற்றும் மணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் இனிப்பு, கார மற்றும் பேக்கரி தயாரிப்பாளர்கள் 80-க்கு மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக மாலை 3.30 மணியளவில் முசிறி பகுதி துறையூர், உப்பிலியாபுரம், தாத்தையங்கார்பேட்டை பகுதியில் உள்ள இனிப்பு மற்றும் பேக்கரி உணவு உதயாரிப்பாளர்கள் 50-க்கும் மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு, தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேக்கரி சங்க தலைவர் திரு.வைத்தியலிங்கம், துணை தலைவர் திரு.ஆனந்தபாபு, செயலாளர் திரு.கமால் மற்றும் பெரிய மிளகு பாறை வர்த்தக சங்க தலைவர் மகாதேவன் செயலாளர் ஜான்வெஸ்லி மற்றும் பொருளார் சாமுவேல் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு, கூறுகையில் உணவு பொருள் தாயாரிப்பாளர்கள், பேக்கரி, மற்றும் விற்பனையாளர்கள், பலகார சீட்டு கட்டி இனிப்பு மற்றும் கார பலகார வகைகள் செய்து தரும் வியாபாரிகள் அனைவரும் உரிமம்/பதிவு சான்றுகள் பெறவேண்டும் என்றும், இனிப்பு மற்றும் கார பலகார வகைகள் கலப்படமில்லாத சுத்தமான மூலப் பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்றும், பலகார வகைகள், பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய வேண்டும்.

 அவ்வுணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான நிறமிகளையோ பயன்படுத்தக்கூடாது என்றும், பொட்டலமிடப்படும் அனைத்து இனிப்பு மற்றும் பலகார வகைகளில் தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, FSSAI எண் மற்றும் BATCH எண் கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என்றும் இவ்வுணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டாலோ உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக இருந்தாலோ அத்தகையை உணவு வணிகர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் T.சையத் இப்ராஹீம், L.ஸ்டாலின்பிரபு, திரு.N.பாண்டி, E.வசந்தன், A.பொன்ராஜ், D.ரெங்கநாதன், T.மகாதேவன்,D.செல்வராஜ் மற்றும் R.அன்புசெல்வன் ஆகியோர் செய்து இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO