போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

திருச்சி மாநகர காவல் ஆணையர் பொறுப்பேற்ற கார்த்திகேயன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி கஞ்சா விற்பனை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து மாநகரில் கஞ்சா விற்றதாக இந்த ஆண்டு 223 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து தனிப்படை மற்றும் அந்தந்த காவல் துறையின் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பள்ளி மாணவர்களின் நலனைக் கருதி கஞ்சா போதை தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அமர்வு நீதிமன்ற காவல் துறையின் சார்பில் பீமநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கஞ்சா போதையினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து கன்டோன்மென்ட் சரக உதவி ஆணையர் அஜய் தங்கம் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

மேலும் பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடந்தால் அது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவும் அறிவுறுத்தினார். மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்பாடுகளை அமர்வு நீதிமன்ற உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn