திருச்சி விமான நிலையத்தில் தொடர்கதையாகி வரும் தங்கம் கடத்தல் - 1.10 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!!

திருச்சி விமான நிலையத்தில் தொடர்கதையாகி வரும் தங்கம் கடத்தல் - 1.10 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!!

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. தற்போது வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் வருபவர்கள் கிலோ கணக்கில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

கடந்த அக்டோபர் மாதம் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 10.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது இதனைத் தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி துபாயில் இருந்து வந்த 6 நபர்களிடம் நடத்திய சோதனையில் 8.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்கதையாக இருந்து வரும் தங்கம் கடத்தலில் நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.  இதில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கடலூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 152 கிராம் எடை கொண்ட ரூ7.65 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.

அதேபோன்று துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் சோதனையிட்டதில் நாகை மாவட்டம் பழையாறையை  சேர்ந்த முகமது சாதிக் என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 1128 கிராம் எடைகொண்ட ரூ56.61 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

Advertisement

மேலும் அதே விமானத்தில் பயணித்த தஞ்சையைச் சேர்ந்த முகமது ஜியாவுதீன் சாகிப் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த 896 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 44.97 லட்ச ரூபாய் என தெரிய வருகிறது.

இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் முகமது சாதிக் மற்றும் முகமது ஜியாவுதீன் சாகிப் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 2176 கிராம் என்பதும், இதன் மொத்த மதிப்பு 1 கோடியே 9 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் என்பதும் தெரிய வந்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS