நாட்டு நலப்பணித்திட்ட ராக்போர்ட் குரூப் நடத்திய "நல்வாழ்விற்கு யோகா" நிகழ்வு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருச்சி நாட்டு நலப்பணித் திட்டம் ராக்போர்ட் குரூப் சார்பாக "நல்வாழ்விற்கு யோகா "என்ற கருப்பொருளை மையப்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 20 மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கடந்த வாரம் முதல் முன் ஆயத்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
5000 ஆண்டுகள் பழமையான இந்த யோகா கலையை மாணவர்கள் மூலம் உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக கிட்டத்தட்ட 10,000 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பல்வேறு யோகாசனங்கள், யோக முத்திரைகள், பிராணயாமம் ஆகியவற்றை செய்து காட்டி இவற்றின் தொடர் பயிற்சி பெறுவதன் மூலம் கோவிட் பெருந்தொற்றை எதிர்த்து போராட முடியும் என்பதை காண்பிக்க திட்டமிடப்பட்டது.
திட்டமிடலின்படி, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து யோகாசனங்களை குறிப்பாக பிராணாயாமத்தை செய்துகாட்டி அவர்களது குடும்பத்தினருக்கும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்கள் நண்பர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். என்சிசி ராக்போர்ட் குரூப்பைச் சேர்ந்த 9 என்சிசி பட்டாலியன்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட என்சிசி பள்ளி, கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்தது.
இந்த யோகா தினத்தில் இணைய வழியில் மாணவர்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தியுடன் அவர்களுக்கு யோகா சார்ந்த வினாடி - வினா போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி சிறந்த மாணவர்களை தேர்வு செய்தனர்.
மாணவர்களின் முயற்சி பதிவு செய்யும் நோக்கில் செயல்பாடுகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மத்திய அரசின் https://indiancc.mygov.in/ இணையதளத்தில் நாடெங்கிலும் உள்ள மக்கள் இதனால் பயன்பெறும் விதத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF