திருச்சியில் அனுமதியின்றி நடந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார்

திருச்சியில் அனுமதியின்றி நடந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார்

திருச்சி அரியமங்கலம் எஸ்ஐடி தொழில்நுட்பகல்லூரி மைதானத்தில் உடல்நலனை பேண ஹேப்பி டேஸ் என்ற பெயரில் மருத்துவமுகாம் நடத்த போவதாக அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரியமங்கலம் காவல் நிலையத்தில் அனுமதி பெற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் ஹாப்பி ஸ்ட்ரீட் என்ற விளம்பர பதாகைகளை ஆங்காங்கே வைத்துள்ளனர்.

இதனை அறிந்த 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் வயதானவர்கள். இன்று காலை திருச்சி அரியமங்கலம் எஸ் ஐ டி தொழில்நுட்பக் கல்லூரியில் குவிந்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவி பிரபலம் மாகாபா ஆனந்த் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மருத்துவ முகாமுக்கு அனுமதி பெற்று விட்டு, ஹாப்பி ஸ்ட்ரீட் நடத்தக்கூடாது என நிகழ்ச்சிக்கு தடை விதித்து கூட்டத்தை கலைத்தனர். நிகழ்ச்சி ஆரம்பித்து ஒன்று, இரண்டு பாடலுக்கு நடனமாடி வைப் செய்த இளைஞர்கள் அதன் பின்னர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் விழா ஏற்பாட்டாளர்களை திட்டியவாறு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision