திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் பாங்க் காலனியில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் டெங்கு பரவும் அபாயம்

திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் பாங்க் காலனியில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் டெங்கு பரவும் அபாயம்

திருச்சியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வரும் சூழலில் தற்போது  கழிவு நீரும் கலக்கின்றது.கொசு   உற்பத்திக்கான   சூழலை உருவாக்கியுள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான சூழல் இருக்கும்பட்சத்தில் மாநகராட்சி இதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

கண்டோன்மென்ட்  பகுதியில்
ஸ்டேட் பேங்க் காலனியில்  கழிவு  கழிவு நீர் கலக்கிறது. அப்பகுதி மக்கள் தொடர்ந்து மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து வீட்டு வாசலில் முன் தேங்கி நிற்பதாகவும் இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர் உடனடியாக மாநகராட்சி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு கழிவுநீர் பாதையில் சரி செய்தும் கொசு மருந்துகள் அடிக்கும் தங்களை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

டெங்கு காய்ச்சல் பரவுவதால் மக்கள்
முன்னெச்சரிக்கையாக    இருக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துக் கொண்டிருக்கும் நிலையில். காய்ச்சல் பரவுவதை  கட்டுப்படுத்துவதற்கான  முயற்சியிலும் மாநகராட்சி விரைந்து செயல்படவேண்டும்.

இப்பகுதியில் மழை நீர் தேங்குவதை சரி செய்வதோடு கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மாநகராட்சி எடுக்க வேண்டும் என பகுதிவாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn