திருச்சியில் தீபாவளிக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை - மூன்று நாட்களாக வடியாத மழை நீர்

திருச்சியில் தீபாவளிக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை - மூன்று நாட்களாக வடியாத மழை நீர்

திருச்சியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. திருச்சி மாநகரில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் பொதுமக்கள் தாங்களாகவே மோட்டார்கள் வைத்து மழைநீரை வெளியேற்றினர். சில பகுதிகளில் மாநகராட்சி மழை நீர் வடிய நடவடிக்கை எடுத்தது. ஆனால் திருச்சி உறையூர் பாத்திமா நகர் பகுதியில் மழைநீர் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்தது அப்பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

மழைநீர் வீடுகளுக்கு  முன்பும் பின்பும் சூழ்ந்துள்ளதால் தீபாவளிக் கொண்டாட்டத்திற்க்கு கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து உள்ளனர். மேலும் அத்தியாவசியத் தேவையான பால், குடிநீர், கேஸ் வினியோகிக்க கூட யாரும் வர முடியாது என கூறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இப்பகுதியை கடப்பதற்க்குள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். 

இந்த மழைநீர் உய்யக்கொண்டான் வாய்க்காலில் வடிய வேண்டும். வடிகால் பகுதி முறையாக தூர்வார வில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். திருச்சி  மாநகராட்சியின் 60வது வார்டு பகுதியாக உள்ளது. மாநகராட்சி உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களை கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision