ஓரே DNT சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி சீர்மரபினர் நல சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்!!

ஓரே DNT சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி சீர்மரபினர் நல சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்!!

தமிழகத்திலுள்ள 68 சமூக சீர்மரபினர் மக்களுக்கு டிஎன்டி ( DNT ) என்ற ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 1976இல் டிஎன்சி ( DNC ) என்று மாற்றப்பட்டு பழங்குடி மாணவர்கள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த கட்டணமில்லா கல்வி உள்ளிட்ட பல சலுகைகள் பழக்கப்பட்டு விட்டது. தமிழக அரசு சீர்மரபினர் மக்களின் கோரிக்கையை ஏற்று DNTயை DNC யாக மாற்றி விட்டது.

Advertisement

 இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து DNC என்றே வழங்கப்படும் என்றும், மத்திய அரசின் உரிமைகளை பெற DNT என்று அழைக்கப்படுவார் என்று இரட்டை சான்றிதழ் முறையை ஏற்படுத்தி விட்டது. மேலும் DNT சான்றிதழ் வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் அறிவித்தார். ஆனால் அது இன்று வரை நடக்கவில்லை. DNT சமூக பொருளாதார குடும்ப கணக்கெடுப்பு நடத்த ஒரு தொடர்பு அதிகாரி நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டு சிலர் விடுத்து அச்சுறுத்தலால் மறுத்து வருகின்றது. எனவே சமூக பொருளாதார குடும்ப கணக்கெடுப்பு நடத்த நியமன உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தி தமிழகத்திலுள்ள 68 சமூக டிஎன்டி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். 

இந்நிலையில் ஒரே டிஎன்டி ஜாதி சான்றிதழ் வழங்க இறுதி எச்சரிக்கை விடுத்து சீர்மரபினர் நல சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் தங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர். விரைவில் அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் இரண்டு கோடி டிஎன்டி மக்களும் வரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவார்கள் எனவும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.